ஔவையார் - தனிப்பாடல் திரட்டு
"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம் "
- ஔவையார்
சித்திரம் வரைய வேண்டுமா..?..
நாளும் நன்றாக வரைந்து பாருங்கள்.
நல்ல தமிழ் பேச வேண்டுமா....?
சொற்களை அதன் உச்சரிப்புக்கு
ஏற்றபடி நாளும் சொல்லிச்
சொல்லிப் பழகுங்கள்.
கல்வி கற்க வேண்டுமா.... ?
திரும்ப திரும்ப படித்து மனப்பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.
நல்ல பழக்கங்களைக்
கற்றுக்கொள்ள வேண்டுமா?
அவற்றை வழக்கப்படுத்துங்கள் அவை பழக்கமாகிவிடும்.
ஆனால் நட்பு , இரக்கம், கொடை போன்ற நற்பண்புகள் மட்டும் பிறவியிலே அமைவது.
பெற்றோரிடமிருந்து உங்களுக்குக்
கிடைக்கும் கொடை. அதனைப்
பெற்றோரைத் தவிர வேறு யாரும்
வலிந்து ஊட்டி விட முடியாது
என்கிறார் ஔவையார்.