மாறா அருளால் வகுத்துரைத்தீர் - உண்மை விளக்கம் 23

திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா

ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும்
மாறா அருளால் வகுத்துரைத்தீர் – வேறாகா
என்னை எனக்கறியக் காட்டீர் இவைகண்டேன்
உன்னரிய தேசிகரே உற்று. 23

- உண்மை விளக்கம்

பொழிப்புரை:

நினைத்தற்கரிய ஆசாரியரே,

முப்பத்தாறு தத்துவத்தையும், ஆணவமலத்தையும், வலிய கன்மமலத்தையும், விட்டு நீங்காத கிருபை யினாலே வகுத்தருளிச் செய்தீர்,

இம்மலங்களைத் தரிசித்தேன், இனி, இந்த மலங்களுக்கு வேறாகாமல் ஒன்றுபட்டிருக்கின்ற என்னுடைய சொரூபத்தையும் பொருந்தி அருளிச் செய்ய வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Sep-22, 7:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

மேலே