நீயான சுக துக்கம் குறியா வினையென்று கொள் - உண்மை விளக்கம் 22

திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா

ஆறாறு தத்துவமும் சொன்னோம் அடைவாக
மாறா மலமிரண்டும் வாசொல்லக் – கூறில்
அறியாமை ஆணவம்நீ யானசுக துக்கம்
குறியா வினையென்று கொள். 22

- உண்மை விளக்கம்

பொழிப்புரை:

முப்பத்தாறு தத்துவங்களையும் முறையாகச் சொன்னோம்,

விட்டு நீங்காமல் இிருக்கின்ற ஆணவ மலத்தையும் கன்ம மலத்தையும் சொல்லுகிறோங் கேள்,

சொல்லுமிடத்து அறியாமையைப் பண்ணிக் கொண்டு நிற்பது ஆணவ மலம்,

சுகதுக்கமொன்றையும் நினையாமல் நீ தானாயிருப்பது தானே கன்ம மலமென்று அறிவாயாக.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Sep-22, 7:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே