நினைவுகள்
நினைவுகள் வண்ண வண்ண சிந்தனைப் பூக்களாய்,
மனத்தோட்டத்தில் மலர்ந்தே மணக்கின்ற உதிரிப்பூக்கள்;
நினைவு என்னும் இரவில் பூக்கும் ம(ன)ந்தாரைகள்;
நினைவு என்னும் வித்தாரக் கள்ளி இவள்
மனதை கத்தாளை முள்ளாய் குத்தி குத்தி எடுக்கின்றாள்;
வித்தாந்தத்தில் சிந்தாந்தம் பேசுகின்றாள்;
வேதனை தந்தே நொந்து போக வைக்கின்றாள்;
வீணாய் புகுந்து இதய கோவிலில் வீணை வாசிக்கின்றாள்;
விக்கித்த வேலையில் சகிக்க முடியாது வேதனை மூட்டு கின்றாள்;
சகிக்க முடியாத சோகங்களை சுமக்கின்றாள்;
நினைவுகள் தொலைத்த வாழ்க்கை முத்தாரங்கள்
நினைவுகள் கனவில் பூத்த சித்தாரங்கள் ( காலை நட்சத்திரங்கள்)
நினைவுகள் எண்ண ஓடையில் நீந்துகின்ற வண்ண மாய மீன்கள்;
நினைவுகள் நிஜங்களின் பிம்பங்கள்;
நினைவுகள் பருவம் உடுத்திய உருவம் இல்லா பட்டாடைகள்;
விடலை மூட்டிய போதைகள்;
விட்டே பிரிய முடியாது தவிக்கும் வேதனைகள்;
தொட்டே விடாமல் சுடும் நினைவுகள்;
விடிந்தபின் மறைந்து ஓடும் மாயைகள்;
நினைவுகள் விருந்து உண்ணும் இளமைகள்;
நினைவுகள் மருந்து உண்ணும் முதுமைகள்;
நினைவுகள் ஊமை விழிகள்;
நினைவுகள் நெஞ்சை வருடும் நிஜங்கள்;
நினைவுகள் நெஞ்சு சுமக்கும் பாரங்கள்;
நினைவுகள் இதயக் குமிழிகள்;
நிழலாய் தொடரும் ரணங்கள்;
நினைவுகள் நீந்திவரும் கனவுகள்
நினைவு நிபந்தனை அற்ற ஆயல் தண்டனை;
நினைவுகள் உள்ளிருந்தே உருக வைக்கும் உணர்வுகள்;
அது மீட்டும் ஆயிரம் ஆயிரம் சுரங்கள்;
நினைவுகள் அழியாத தனிமைகள்;
நினைவுகள் அழைக்காத விருந்தாளிகள்;
அது அது அழைக்கும் தன் துணையை;
நினைவுகள் அழியாத தழும்புகள்;
நினைவுகள் துணையாக வரும் மாயைகள்;
நினைவுகள் அலைபாயும் எண்ண அலைகள்;
விலைபோகாத வீண் கற்பனைகள்;
நினைவுகள் சிறகடித்துப் பறக்கும் கற்பனைப் பறவைகள்;
நினைவுகள் நீந்திவரும் எண்ணகள்;
வண்ணச் சிறகுகளை விரித்து மனம் என்னும் மாயவீதில்
அழகு நடனம் ஆடுகின்றன;
நினைவுகள் இதயப்பேழையில் சிதறிக்கிடக்கும் நவமணிகள் நவ ரசங்கள்;
நினைவுகள் மன கண்ணால் படம் பித்து
இதயத்தில் மறைத்து வைக்கின்றன விம்பங்கள்;
நினைவுகள் ஆராத ரணங்கள்;
ஓயாத நினைவலைகள்;
நினைவுகள் இதயத்தில் குவிந்து கிடக்கும் குப்பை கூழங்கள்;
நினைவுகள் குவிந்து கிடக்கும் .ரகசியங்கள்;
நினைவுகள் மனதில் மினுக்கும் மின்மினி பூச்சுக்கள்;
நினைவுகளை சுமப்போம்;
நிம்மதி இழந்தாலும்
நினைவுகளை சுவைப்போம்;
நினைவுச் சாலையில் நித்தம் பயணம் செய்வோம்.
அன்பன் அ. முத்துவேழப்பன்