தாலாட்டு
என்னை விட்டு போனானடி கண்ணே
உன்னையும் என்கருவில் சுமக்க விட்டு
எண்ணிப் பார்க்க முடியா துயரில்
உன்னையும் பெற்றெடுத்தேனடி கண்ணே
எண்ணிப் பார்த்தேன் என்னுயிரே இந்த
உலகில் உனக்கென ஓர் தனியுலகம்
இனிதாய் அமைத்து தந்திட மனதில்
உறுதி கொண்டேன் உனக்காக வாழ்ந்திடவே
கண்ணேவா கண்ணின் மணியே வா
என்மடியில் வந்து உறங்கிட வா
தாலாட்டு பாடுவேன் உனக்கு வந்துறங்கு
இருண்ட என்வாழ்வில் சுடராய் வந்தாய்
உன்னைக் காத்திடுவேன் அன்னைநான்
என் உயிரினும் மேலாய்
கண்ணே கனியமுதே கனகமே கண்ணுறங்காய்
உன்னைக் காத்திடுவேனே கண்ணின் இமையாய்
என் மதியும் நீயே என் நிதியும் நீயே
கண்ணே கனகமே துயில் கொள்வாய்நீ
உன்னைக் காத்திடுவேன் காத்து இனிதாய்
வளர்த்திடவே உயிர்வாழ்கின்றேன் கண்ணே
கண்ணுறங்கு கண்ணுறங்கு நாளை பொழுது
இனிதாய் விடியும் உனக்கேன் கவலை
கண்ணுறங்கு கண்ணுறங்கு கற்பகமே கண்ணுறங்கு