தன்னார்வலர்

.. .தன்னார்வலர்கள் .
😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
மண்ணைத் தின்று உயிர் வாழ்வான்
என்ன சொன்னாலும் உடனே செய்வான்
தன்னார்வலர் என்றே பெயர் எனக்கு
சம்பளம் இங்கே எனக்கெதுக்கு..

வெண்ணைப் பயலுக ஆளும் நாட்டில்
மொன்னைப் பயலுக தீட்டும் திட்டம்
கடந்த காலத்தில் நாட்டை ஆண்ட
கவ்வோதிக்கு இது தெரியாம போச்சு..

அரசுப் பணி எல்லாம் தன்னார்வலரால்
அடுக்கடுக்காக நியமனம் செய்தால்
கருவூலப் பணம் இனி முழுவதுமே
கட்சி நிதிக்கு பரிமாற்றம் செய்யலாம்..

தன்னார்வலர் என்ற வேலை வாய்ப்பு
என்னமாய் கிடைக்குது பாரத நாட்டில்
அன்னிய நாட்டுக்கு இத்திட்டம் தெரிந்தால்
அள்ளிச் செல்வான் நம் அதிகாரியை எல்லாம்..

அப்படியே....

கட்சி , தேர்தல் அலப்பறை தவிர்க்க
லஞ்ச ஒழிப்பு சோதனை குறைக்க
ஆட்சிப் பணிக்கும் தன்னார்வலர்கள்
ஆயிரக் கணக்கில் காத்துக் கிடக்கிறோம்..

இந்த யோசனையும் அதிகாரிகள் அறிந்தால்
எந்தச் செலவும் நாட்டுக்கு இல்லையே !!!!

🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

எழுதியவர் : க. செல்வராசு (30-Sep-22, 12:07 am)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 129

மேலே