ஆடு

. ஆடு
.
🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀
உண்டு வாழ சுவையுணவாய்
கண்டு பிடித்தான் மனித இனம்
விண்டளவு (மலை) வாழும் எம் இனத்தை
வெட்டுகிறான் கிழமை ஞாயிறு என்றால் !

நரிக்கு நாங்கள் பயந்து தானே
நாட்டுக்குள்ளே குடி புகுந்தோம் -இறைவா
மனித ஓநாய் கொள்கிறதே
என உரக்க உரறி (முழங்கி)குரல் கொடுத்தேன் !

செத்துச் செத்துப் பிழைப்பதற்கா
சிவனே என்னைப் படைத்திட்டாய்
அத்தம் (காடு) சென்று தவம் புரிந்து
அத்துணை கடவுளின் செவியுரைத்தேன் !

நெதியாய் (செல்வம்) கொழிக்கும் பெருமாளிடம்
நீதியைக் கேட்டு முறையிட்டேன்
புரட்டாசிக்கு நான் பொருப்பு
போதுமா என்றால் பயனுண்டா?

இறப்புக்கான தியதி(தேதி)யதை
இம்மாதம் தவிர்த்த நிம்மதியில்
ஏனைய நாளும் உயிர் வாழ
என்ன வழி என்று யோசித்தேன் !

இகழ்துழியாய்(தூரமான இடம்)ஓரிடத்தை
எனக்கு நீயும் வழங்கிட்டால்
பசும்புல் மேய்ந்து நான் தனியே
பகையுணர்வின்றி வாழக் கேட்டேன்

அய்யனாரும் முணியாண்டியும்
அரிவாளைக் கீழே வைக்காமல்
அயர்(கொண்டாடும்)என்றால் படையலுக்கு
என் உயிர் வேண்டும் சொல்லிட்டாங்க!

கோழியின் கதையோ எனை விடவும்
கொடுமை தானாம் எப்படினா ?
சட்டுவம்(தோசை திருப்பி)ஒருநாள் சொல்லிடுச்சு
அது முட்டையிலேயே உயிர் விடுதாம்..

சின்னல்(பகட்டு)மனிதன் அறிந்ததெல்லாம்
உண்ண நல்ல கறிவிருந்து -மனிதா
தின்ன இந்த பூமியிலே
தெரியலையாடா வேறுணவு !

எவ்வம்(துன்பம்)என்பது என்னிடத்தில்
யாரும் தீர்க்க முன்வரல
பவ்வியமாக உயிர் துறந்தேன்
பழியுணர்வோடே உணவானேன் !

என் கோபத்தை எல்லாம் கொழுப்பாக்கி
கொண்டுபோய் அடைத்தேன் இதயத்தை
மதுகை(வலிமை)நிறைந்தவன் நான் என்று
மனிதன் அப்ப கண்டுணர்ந்தான் ...

- மனிதனும் நானும் --------

உலம்(வலிமை)என்பதில் நமக்குள்ளே
உண்மையில் யாரென்று போட்டி வைத்தேன்
பாடையில் மனிதனை படுக்க வைத்தே
என் பழியுணர்வை அன்று முடித்து வைத்தேன்....

🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪

எழுதியவர் : க. செல்வராசு (30-Sep-22, 12:03 am)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : aadu
பார்வை : 44

மேலே