மூன்று முடிச்சு
திருமண வைபவத்தில்
முக்கியமான சடங்கு
தாலி கட்டுவது.
தாலி ...
மணமகள் கழுத்தில்
மூன்று முடிச்சிபோடுவது.
சரிதானே....!
அதன் விளக்கம்...
உள் அர்த்தம்...
இதோ என் பார்வையில்...
பெண்ணே...நீ
யாரோ..எவரோ...
உறவோ...அசலோ...
ஆனால் இன்று முதல்
உன் வாழ்நாள் முழுதும்
உன் ஆயுள்முழுவதும்
உனக்கு
ஆதாரமாய் இருப்பேன்
என்கின்ற உறுதியுடன்
உன்னை என்
தாரமாய் ஏற்றுக்கொள்கிறேன்
என முதல் முடிச்சு...!
எனக்கு ஆதாரமாய் - வாழ்வின்
ஏற்ற...இறக்கங்கள்,
லாப....நஷ்டங்கள்,
நிறை...குறைகளுக்கு
என்றும் சுமை தாங்கியாய்
நம் சன்னதிகளுக்கு
ஆணி வேராய்
நீ என்றும்
இருந்திட வேண்டுமென
இரண்டாம் முடிச்சு....!
இன்றுமுதல்
நாம் இருவரும் சேர்ந்து
நம் வாழ்வுக்கு மட்டுமல்ல
நம் சொந்தங்களுக்கு மட்டுமல்ல
வாழும் இவ்வுலகுக்கு
சுற்று சூழலுக்கு
சக மனித குலத்துக்கு
ஆதரவாய்...ஆதாரமாய்...
இருப்போம்...வாழ்வோமென
மூன்றாம் முடிச்சு....!