ஆர்ப்பரிக்கும் உன் நினைவலைகள் 555
***ஆர்ப்பரிக்கும் உன் நினைவலைகள் 555 ***
ப்ரியமானவளே...
என் நெஞ்சினில் ததும்பி
கொண்டு இருக்கும்...
உன் அழகிய நினைவுகளை
தினம் தினம் அசைபோடுகிறேன்...
என்னோடு பேசும் உன்
விழிகளை காண துடிக்கிறேன்...
உன்னைக்கண்டாலே எனக்குள்
ஆர்ப்பரிக்கும் ஆசைகளை...
நான்
எப்படி சொல்வேன்...
தினம் நீ விரும்பி வாசிக்கும்
புத்தகத்தின் எழுத்துக்களாக இருந்தால்...
உன் கண்களால் ரசிப்பாய்
இதழ்களால் உச்சரிப்பாய்...
கொக்கி போடும் உன்
வார்த்தைகளில் சிக்கிவிட்டேன்...
நினைவாக வந்து செல்லும் நீ
வாழ்க்கை துணையாக வந்துவிடு...
உலகில் எதையும் வெல்வேன்
எமனையும் வெல்வேன் உனக்காக.....
***முதல்பூ.பெ.மணி.....***