அந்த வானத்து சொர்க்கமும் ஏதுக்கடி
புதிர்போல் ஒரு புன்னகை
புன்னகையில் ஓர் மௌனம்
மௌனமாய் விரியும் விழிகளில்
வானத்தின் நீலம்
நீல விழிகளின் அசைவும்
நிலவு தவழும் பூமுகமும்
தென்றலாடும் கூந்தலும்
தேன் சிந்தும் செவ்விதழும்
செவ்விதழில் வாணியின் தமிழும்
ஏந்தி அந்திப் பொழுதில்
நீ வந்த பின்னே
அந்த வானத்து சொர்க்கமும்
ஏதுக்கடி ?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
