என்னைக் கொல்லாமல் கொல்லுதடி

தென்றலில் ஆடிடும் கூந்தலின்
............................காரெழிலும்
சின்ன இடைக்கொடியும் புன்னகை
............................பூவெழிலும்
மின்னல்விழி நீலத்தில் துள்ளும்
............................மீனெழிலும்
என்னைக் கொல்லாமல் கொல்லுதடி
...............................பிரியசகி !
இயைந்த எதுகை நாலு சீர்
நாலடியில் இலக்கண
எளிமையில் பொலியும் பாவினமாம்
கலிவிருத்தம்
கம்பனை உயர்த்திய பாவினமே
எங்களையும் உயர்த்து
.