தனிமையும் ஒருவித விஷம்தான் 555

***தனிமையும் ஒருவித விஷம்தான் 555 ***
உயிரானவளே...
என் இமைகள் மூடுவதால்
உலகம் இருளாவதில்லை...
இருளானாலும் அந்த இருளில்
நீ கனவாக வருவாயே...
தனிமையும் சுகம்தான்
ரசித்தேன் அன்று...
இன்றைய தனிமை
விஷமாக கொள்கிறது என்னை...
அமாவாசை இரவில்
நிலவுதான் வருவதில்லை...
இப்போதெல்லாம்
நீகூட வருவதில்லை கனவில்...
எத்தனை முத்தங்கள் உன்
புகைப்படத்திற்கு நான் கொடுத்தாலும்...
நேரில் உன்னிடம் நான்
வாங்குவதை போல் இருக்குமா...
கண்ணாடி சில்லாய்
சிதறிய என் இதயத்திலும்...
உன் நினைவுகள்
சிதறாமல் இருக்கிறது இன்னும்...
உன்னை மறக்கும் முயற்சியில்
நான் தோற்றாலும்...
உன்னை நினைக்கும் முயற்சியில்
நான் தோற்றதில்லை...
நினைவெல்லாம் நீதானடி
உயிரானவளே.....
***முதல்பூ.பெ.மணி.....***