கறைந்துவிட்டன நினைவுகள் எல்லாம் 555

***கறைந்துவிட்டன நினைவுகள் எல்லாம் 555 ***
என்னவளே...
நாட்கள் பல கடந்து நீயும்
நானும் சந்திக்கும் இந்த நாட்களில்...
எத்தனை அமைதியில்
நம் உள்ளங்கள...
உன்னுயிர் நான் என்றும்
என்னுயிர் நீ என்றும்...
அலைபாய்ந்த நம் உள்ளம்
இன்று அமைதியாக...
அந்தி சாயும் இந்த வேளையில்
பல நினைவுகள் வந்து செல்கிறது...
தனிப்பறவையாய் நீ
தவிக்கவிட்டு சென்றபோது...
தவித்து நின்ற என் உள்ளம்
இன்று எல்லாம் மாறிவிட்டது...
அந்த நாட்கள் இன்று கனவில்கூட
வருவதில்லை கலைந்துவிட்டன...
காலமும் அவற்றை
கரைத்துவிட்டன...
உன் வாழ்வும் இன்பமாக
என் வாழ்வும் இன்று இன்பமாக...
காதலின் வலிமையை உணராத
போது காதலுக்கு போராட்டம்...
காதலின் வலிமையை
உணர்ந்த போதுதான்...
வாழ்க்கை இன்ப
தேரோட்டம் நமக்கு இன்று...
அன்றைய காதல்
இன்று உருவாக்கியது...
நம்மை
நல்ல தோழமைகளாக.....
***முதல்பூ.பெ.மணி.....***