கண்களில் ஊற்றெடுக்கும் நீர்த்துளிகள் 555

***கண்களில் ஊற்றெடுக்கும் நீர்த்துளிகள் 555 ***
என்னுயிரே...
தினம் உனக்காக
காத்திருந்த நாட்களில்...
என்னை நீ கடந்து
செல்லும் போதெல்லாம்...
ஓரப்பார்வை
வீசி செல்வாய்...
காதலிக்கும் போது
காத்திருந்த நாட்களில்...
இதழ்களால் பேசி
கண்களால் கட்டியணைப்பாய்...
கோபத்தில் தவறிய வார்த்தையில்
இத்தனை மாதப்பிரிவில்...
எத்தனையோ குறுங்செய்திகள்
கைபேசி அழைப்புகள்...
எதர்க்கும்
பதில் தராத நீ...
நேற்று சொன்னாய்
நாம் சந்திக்கலாமா என்று...
உன் குறுங்செய்திகள் பார்த்ததும்
துள்ளி மகிழ்ந்தேன்...
இத்தனை மாத காதலை
சேர்த்து ஒன்றாக கொடுத்துவிட...
கால்கடுக்க காதலோடு காத்திருந்த
எனக்கு பேரதிர்ச்சி கொடுத்தாய்...
காதலோடு
காத்திருந்த எனக்கு...
உன் திருமண
அழைப்பிதழை கொடுத்தாய்...
பொங்கி வந்த
காதல் வலியாகமாறி...
கண்களில் ஊற்றெடுத்து மழைதுளியாய்
மண்ணில் விழுகிறது...
என் காதல்
என்றும் மாறாத...
உன்னை
என்றும் வாழ்த்தும்.....
***முதல்பூ.பெ.மணி.....***