இயற்கைக்கு ஓர் யாப்பு வென்றிடும் புன்னகையில்

தென்றல் உலாவரும்
.............தேமாங்கனித் தோப்பு
தென்னங் கீற்றும்
..............தென்னம்பூ வோடாட
வென்றிடும் புன்னகையில்
................குழலோடுன் விழியாட
சின்னக்குயில் பாடும்
............... இளவேனில் காலம்

யாப்பார்வலர் குறிப்பு :

4 சீர் 4 அடி இயைந்த அடி எதுகை
இது கலிவிருத்தம் எனும்
கலிப்பாவின் இனம்
பாவினத்திற்கு தேவை இல்லை
தளை விதிகள்

ஆதலால் வெண்பாபோல் நேரா
நிரையா மாவா காயா கனியா
என்றெல்லாம் பார்க்கத் தேவை
இல்லை
பிளவுபடா சொல்லே சீராக
அமையின் இப்பாவினங்கள்
எழுதுவது மிகவும் எளிது
விருத்தம் என்றால் கம்பன் பாடல்























































.

எழுதியவர் : கவின் சாரலன் (8-Oct-22, 9:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே