காற்றின் குறும்பு

காற்றின் கிசு கிசுப்பில்
குலுங்கி சிரிக்கின்றன
மரத்தின் கிளைகளில்
இருந்த இலைகள்

இலைகளின்
கிலு கிலுப்பில்
நெளிந்து வளைகின்றன
கிளைகளும்

ஆனாலும்
அடிமரம் மட்டும்
அசையாமல்
நிற்பதை

இப்படி மரமாய்
நிற்கிறது
கொஞ்சம் கிளைகளிடம்
சொல்லக்கூடாதா?

முணுத்தபடி
உதிர்ந்து கொண்டிருக்கின்றன
பூக்களும் இளம்
பிஞ்சுகளும்

எழுதியவர் : தாமோதரன். ஸ்ரீ (9-Oct-22, 11:18 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kaatrin kurumbu
பார்வை : 217

மேலே