வெட்சியின் வீரவெற்றிகள்

வெட்சிமலரே!
பள்ளியினுள்ளே நுழைந்தபோதெல்லாம் என் கண்களை ஈர்த்தது நீதானே?
செந்நிற பூங்கொத்தாய் இயற்கைத்தாய் எங்களுக்கு அளிக்கும் அருங்கொடையே நீ!

பழந்தமிழ் சிறப்புபெற்ற அழகுமலரே,
உன்னை இட்லியோடு ஒப்பிட்டு புகழ்கிறோம்;
அருமருந்தாகவும் பயன்படும் உன்னை எண்ணி வியக்கிறோம்!

தனித்திருக்கும் பூக்களைவிட கொத்தாய் மலரும் நீயே அருமை;
ஒற்றுமையின் சிறப்பை அற்புதமாய் இவ்வுலகுக்கு அறிவிக்கிறாய்!

எழுதியவர் : ரித்மி ரோசா ச (16-Oct-22, 2:45 am)
சேர்த்தது : ரித்மி ரோசா ச
பார்வை : 484

மேலே