கண்ணன் நிறம் என்றும் கருமையே
பெரும் மழை நீர் சுமக்கும்
மேகம் நிறம் கரு நீலம்
மழைப் பொழிந்த பின்னே கார்மேகம்
நிறம் மாறி வெண்மேகமாய்த் திரியும்
நீல வானில்; கண்ணா நீயோ,
கார்முகில் வண்ணன் என்றும் அன்பு
மழைத் தாங்கும் நீல மேகம்
எத்தனை முறை உலகில் நீ
அன்பு மழைப் பொழிந்தாலும் உன்
அன்பு குறைவதில்லை அதனால் உன்
மேனியும் கண்ணா அன்றும் இன்றும்
என்றும் கருமையே சியாமா