அனுபவம் எங்கே

அனுபவம் எங்கடி? அனுபவம் எங்கே போச்சு?
@@@@@
என்னக்கா கேட்கிற? ஒவ்வொருத்தரும் வெவ்வேறு அனுபவங்கள் இருக்கும். அனுபவத்துக்குக் காலு கையா இருக்குது? காணாமல் போக?
@@@@@@
நீ பெற்ற அனுபவத்தைக் கேட்டேன்.
@@@####@#
எனக்கு வயசு இருபத்தெட்டு ஆகுது. மணமானவவள். மூன்று வயசு பெண் குழந்தையும் உள்ளது. என்னுடைய அனுபவத்தை எல்லாம் சொல்லறதா இருந்தா பல நாட்கள் ஆகும்.
@@#####
அடியே நிஷா. இரவு (Nisha = Night). நீ பெற்ற அனுபவத்தைக் கேட்டேன்.
@@@@@@
அதுக்குத்தான் பதில் சொல்லிட்டனே!
@@@@@@@@
நீ பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த அனுபவத்தைக் கேட்டேன்.
@@@@@@@
அது எல்லாத் தாய்மார்களுக்கும் உள்ள அனுபவம் தானே.
@@@@@@@
அடிப்போடி 'இரவு'. நீ பெற்றெடுத்த பெண் குழந்தை எங்கேனு கேட்டேன்.
@@@@@@
இல்லையே. "அனுபவம் எங்கடி?"னு தானே கேட்டாய்.
@@@@@@@
அடியே பெயர் வெறியாளே ஏன் குழந்தையின் பெயர் என்ன?
@@@@@@@
என் செல்லத்தின் பெயர் 'அனுபூதி'.
@@@@@
அதுக்கு என்ன பொருள்?
@@@@
அது என்னவோ எனக்குத் தெரியாது.
@@@@@@@
அதைத்தான் நான் திரும்பத்திரும்பக் கேட்டேன்.
@@@@@@@@
என் குழந்தை பேரு உலகத் தமிழர் யாரும் அவுங்க பிள்ளைகளுக்கு வைக்காத பெயர். அது எனக்கு பெருமையாக இருக்குது.
@@###@@
அடி அறிவிலியே. தமிழில் இல்லாத அழகான பெயர்களா இந்தில இருக்குது?
@@@@@@@@@
உன் மகள் 'அனுபூதி'யின் பெயருக்கு 'அனுபவம்'னு அர்த்தம்.‌
@@@##@
ஐய்யய்யோ! அனுபூதிக்கு அர்த்தம் 'அனுபவம்'மா? இந்தப் பெயரோடு அர்த்தம் தெரிஞ்சா என் பொண்ணோட பெயரின் பொருள் தெரிஞ்சவங்க எல்லாம் என் பொண்ணணைப் பார்க்கிற‌ போதொல்லாம் "அனுபவம் வருது. அனுபவம் போகுது. அனுபவம் அழகா இருக்குதென்று கிண்டல் பண்ணுவாங்களே நான் என்ன செய்வேன்?
@@@@@@@@@
அடியே இரவு (Nisha), ஒரு நல்ல தமிழ்ப் பெயரைத் தேர்ந்தெடுத்து வழக்குரைஞரிடம் போங்க. ஒரு மாதத்துக்குள் உன் குழந்தையின் பெயர் தமிழ்ப் பெயர் அதிகாரப் பூர்வமா அரசிதழ்ல வெளியாகிடும்.
*********
மிக்க நன்றி அக்கா.
@@#@@@@@@@@@@@@@@@@@@@@@@@##
Anubhuti = Experience. Indian feminine name

எழுதியவர் : மலர் (16-Oct-22, 10:23 am)
சேர்த்தது : மலர்91
Tanglish : anupavam engae
பார்வை : 151

மேலே