செருப்பின் மகிமை

நேரிசை ஆசிரியப்பா

கோயிலில் செருப்புடன் நுழையக் கூடா
கோயிலின் வெளியே விட்டுப் போவார்
திருமண விழாவிலும் செருப்பு கூடாவாம்
நுழை வாயிலில் விட்டுப் போவார்
வணங்கலும் விழாமுடிந் துத்திரும் பிப்பார்க்க
பலரின் காலணி கிடைக்கா வேறுபல
பொத்தல் காலணி களுமே பல்லிளித்து
கேலிசெய்யும் எல்லாம் பரதாழ்வார் பணியாம்
இராமனின் செருப்பை வைத்து ஆண்டான்
பரதன் இச்செருப்புத் திருட்டு பரதர்
என்ன செய்வார் என்றார்
கிவாஜா தன்கலை மகள்புத்த் கத்திலே

எழுதியவர் : பழனி ராஜன் (17-Oct-22, 8:32 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 91

சிறந்த நகைச்சுவைகள்

மேலே