யாப்பு மோனையும் இல்லாதது பாவினமோ
நேரிசை வெண்பா
அகத்தியன் செய்த அணிமோனை வேண்டாம்
பகரும் கவினின் பகரம் --- விகற்ப
மதையேற் றிடாநம் மனமும் கொதிக்க
பதைக்குதையோ பாவினமாம் பார்
பகரும். = சொல்லுதல்
பகரம். =. பதில்
தாங்கள் இந்த எழுத்துத் தளத்தில் பலவருடஙகளாகஎழுதி வருவது
பலரும் அறிந்தது. இந்தத் தளத்தில் அனேகரும் காதல்
பற்றியே உரைநடை பாடலையே ஏதோ யாப்பிலக்கணப் பாடலைப்
போன்று எழுதி வருவதும் அதை ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்வதும்
உமக்கும் பரிச்சயமே. நீங்களும் பலபல பாடல்களை வெண்பா என்றும்
கலிவிருத்தம் கலித்துறை என்றும் எழுதி அதை யாப்பார்வலர்கள்
கவனிக்கவும் என்றும் ஒராண்டாய் எழுதி வருகின்றீர்கள். அப்பாடல்களில்
பலத்திலும் கனிச்சீர்களும் பூச்சீர் நிழல் சீர்கள் வரை எழுதினீர்கள் .. நானும்
மற்றொருவர் பாவலர் பாமணி டாக்டர் அவர்களும் இதைச் சுட்டிக்காட்டி
பலமுறை அப்படி எழுதுவது தவறு என்று கூறியது எழுத்தில் இன்றும் கிடக்கிறது.
அதற்கு நீங்கள் யாப்புப் பாக்கள் வேறு நான் எழுதுவது பாவினம் என்றீர்கள்
பவினமென்று யாப்பிலக்கண நூலில் விதிகள் சொல்லவில்லை என்று நான் சொல்லி
வந்தேன். மேலும் பாவினத்து வெண்பா கலிவிருத்தம் கலித்துறை என்று எழுதாதீர்கள்.
அப்படி நீங்கள் எழுத மற்றவர்களும் அந்தப் பிழையை செய்வார்கள் என்றும் கேட்டுக்கொண்டேன்.
ஆனால் நீங்கள் தொடர்ந்து பிழையாக எழுதி அதற்கு கலித் துறை கலி விருத்தம் அறு சீர் விருத்தம்
என்றெல்லாம் இஷ்டம் போல எழுதி வந்தீர்கள். பலதடவை டாக்டர் திரு வ. கன்னியப்பன் அவர்கள்
உங்கள் பாட்டைத் திருத்தி சரியான எதுகை மோனை போட்டு எழுதிக் காட்டியும் நீங்கள்
உங்கள் பிழையை ஒத்துக்கொள்ளாமல் அது பாவினம் மோனை வேண்டாமென்றீர்... அப்படியாயின்
கலி விருத்தம் கலித்துறை என்றும் அறுசீர் விருத்தம் எண்டும் குறிக்காதீர் என்றும் சொன்னோம்.
நான் 20.10.22 இன்று
குதிரை சவாரியாக் கழுதை சவாரியா ?
என்ற நேரிசை வெண்பா எழுதினேன்
புணரக் கழுதை குதிரையை யீனா
உணர்ந்துநீ யாப்பில் புனைவாய் --- கணக்காய்
நுணுக்கங் களையும் புரிந்து ஒதுக்கு
பனுவலாகா பாவினம் பார்
முதல் வரியில். பு. கு மோனை
இரண்டில். உ. பு. மோனை
மூன்றில். நு. பு. மோனை
நான்கில். ப. பா மோனை
யாப்பிலக்கணம் குதிரை என்றால் மற்றவை கழுதை
பாவினத்தில் யெவரும் செய்யுள் இலக்கியம் படைக்கவில்லை
முதலையும் மூர்கனும் கொண்டது விடாரென யாப்பு எழுத முடியாது
இல்லாத பாவினதை உறுதி செய்யாதீர்
ணு. னு வர்க எதுகை. இரு விகற்ப நேரிசை வெண்பா
என்ற வெண்பாவில் மோனைகளின் அவிசியமும்
பாவினம் என்பதொன்று இல்லை என்று எழுதினேன்
அதற்கு நீங்கள் பதில் சொல்லும் விதத்தில் 20.10.22 பகல் 2.16 மணிக்கு
கீழ் கண்ட இன்னிசைக் சிந்தியல் வெண்பா எழுதி
பாவினம் எழுதி நாவினில் உலவச் செய்வோம்
யாப்பினை என்று எழுதி மழுப்பி இருந்தது.
உங்கள் பாடல் இதுதான்
பாவினத்தை பாவைநாம் யாப்பின்
அழகினில்
நாவில் உலவிடச் செய்திடுவோம்
பூவிழியே
பூவிதழே புன்னகைபோ தும்
அதற்கு நானும் ஒரு கருத்து அளித்தேன் அதுவும் கீழே உள்ளது
" தம்பி கவின் சாரலருக்கு வணக்கம்
பாடலின் இரண்டு மூன்று வரிகளில் மோனை யில்லை மற்றும் பாவினக் கருத்து பரப்பல் தவறு
இதைத்தான் துளி விஷம் என்பது .. எழுந்து நிற்க முடியாதவனுக்கு யாப்பு பாவினமும் இரண்டு பெண்டாட்டி எதற்கு !
"" யாப்பிலக்கணத்திற்கு எதிராக பாவினம் என்ற விஷத்தை பரப்பதீர்கள் "" என்று சொன்னேன்
அதற்கும் விடாமல் நீங்கள் தந்த பதில்
இலக்கண அணுகுமுறைகள்
வேறானது
தளை தட்டா
சீரமைப்புதான் வெண்பாவின்
அடிப்படை விதி
அண்மையில் யாப்பிலக்கணம்
தெரிந்து ஆர்வத்தில் எழுதுகிறீர்கள் நன்று
அதனாலே உங்கள் கருத்திற்கு
மரியாதை கொடுத்து எழுதுகிறேன்
தமிழ்க் கடவுள் முருகனுக்கு
இரண்டு மனைவியர்கள்
அதுபோல் தமிழ்க்கவிதைக்கு
இருவர்
ஒருத்தி யாப்பினள்
இன்னொருத்தி புதுக்கவிதையினள்
நான் உங்களைக் கேட்டது யாப்பு என்று பாவினத்தை புகுத்தவேண்டாமென்றேன் நீங்களோ பாவினம் விடுத்து
புதுக்கவிதை இன்னொரு மனைவி என்கின்றீர் இப்போது பாவினம் மாறி புதுக்கவிதையை
போட்டு எதற்கு திசை மாற்றுகிறீர்,குழப்புகின்றீர். பாவினம் என்ன ஆயிற்று.
மேலும் நானும் "". அண்மையில் யாப்பிலக்கணம் தெரிந்து ஆர்வத்தில் எழுதுகிறீர்கள் நன்று """
என்று ஏதோ நான் யாப்பு அறியாத அப்பாவி இன்றுதான் கற்றுக் கொண்டவனென சொல்லுகிறீர்கள்
நான் 40 வருடமாய் சித்தர்களின் வெண்பா களி விருத்தம் கலித்துறை கழிநெடிலடி விருத்தம் போன்ற யாப்புப் பாடல்களை படித்து வருகிறேன்.ஆனால் 5 வருடங்களாகத்தான் எழுத்தில் எழுதுகிறேன் அந்த
40 வருட படிப்பு அனுபவமில்லையா போதாதா. ?
வெண்பாவில் மோனை வேண்டும் என்று கேட்டால் உங்கள் பதில்
""" தளை தட்டா சீரமைப்புதான் வெண்பாவின் அடிப்படை விதி மோனை தேவையில்லை
அடிப்படை விதி யில்லை என்கிறீர்கள். எங்கிருக்கிறது வேண்டாமென்று சட்டம்
நான் காட்டுகிறேன் வேண்டுமென்ற சட்டம் இதுதான
எனது பதிலும் இதுதான்
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அகதியனும் வள்ளுவனும் வெண்பாவில் கலித்துறை
கலிவிருத்தத்தில் எதுகை மோனை வைத்து எழுத கவின் சாரலருக்கு அது தெரியவில்லையா
அல்லது எழுத வரவில்லையே என்பதை சொல்ஸ்ட்டும்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய சில பழைய கலித்துறையும் வெண்பாவும் தந்துள்ளேன்
பாருங்கள். அதில் யாரெல்லாம் வெண்பாவில் மோனையை எழுதி இருக்கிறார் பாருங்கள்
சுமார் 40 வருடங்களாக 28 சித்தர்களின் நூல்களை 50 க்கும்ர் மேற்ற்பட்ட நூல்களைப் பலமுறை
ஆழ்ந்து படித்திருக்கிறேன்
சித்தர்கள் அகத்தியர் கொங்கணர் சிவ வாக்கியர் கைலாய முநிகள் யாக்கோபு போகர்
கோரக்கர் மச்சர் தன்வந்திரி திருமூலர் மற்றுமுள்ளோர் அனைவரும் யாப்பின் இலக்கணத்தில்
விருத்தங்கள் வெண்பா கலித் துறை கலிவிருத்தம் பாடல்களிலே தக்க எதுகை மோனை யுடன்
பாடியுள்ளதை ஆயிரக்கணக்கில் பார்க்கலாம். கேட்டால் நானே காட்டுகிறேன் . எங் கிருந்து
வந்தது உங்கள் பாவினம் காட்டுங்கள்.
அகத்தியர் பரிபாஷைத்திரட்டு. 500
அகத்தியர். ( காய கற்ப ரகசியம் பற்றிய நூல் )
கலித்துறை
காபபு
பரமஞா னோதயத்துப் பரஞ்சுடர் உலகுக் கெல்லாம்
திரமதாய் உதித்தஞான திவாகரன் திருத்தாள் காப்பு
கரமாம் வகாரயோ கமறைப்பு நூற்பாடை யெல்லாம்
முருகவிழ் தமிழ்செய்ய முருகனைங் கரர்தாள் காப்பே
நான்கு வரிகளிலும் ஒன்று மூன்று சீர்களில் தவறாத மோனைகளைப் பாருங்கள்
ப, ப தி. தி. க. க. மு. மு
பாயிரம்
கலித்துறை
இந்தநூலைந் துகாண்டத் தியம்பிய கருவே தென்றா ல்
சந்தேகந் தீர்க்கவேண்டித் தமிழ்கவி யைநூற் றுக்குள்
மந்திரவா தயோக மணிபஞ் சீகரண மார்கம்
சிந்தைசெய்வ காரபாட்டை தீட்சையுஞ் செப்பு மாதே
இக்கலித்துறை யிலும் 1 மற்றும் 3 லும் மோனைகளை கவனியுங்கள்
1.இ. தி 2. ச. த. 3. மா. மா. 4. சி.... தீ
திருவள்ளுவர் எழுதிய காயகற்ப நூலில்.
பஞ்சரத்தினம் எனும் நூலில்
வெண்பா
தன்னை யறிந்தவற்குந் தானன்றோ வானத்தில்
அன்னையவள் வந்துமே ஆதரித்து --- முன்னை
பவமோட்டிப் பாலூட்டிப் பக்குவமேற் கூட்டிச்
சிவநிலையை சேர்ப்பாள் சிறந்து. (பாடல். 74)
வரி 1 இல். த ,. தா,,. 2 இல் அ. ஆ. 3 இல். ப. ,. ப 4 இல். சி. ,. சி
வெண்பா
பிண்டத்தின் மேற்குப் பிரிதிவி தான்கிழக்கு
அண்டத் தினடிமுடி யற்சிப்பார் -- விண்டுமுன்னே
காணாச் சுழிமுனையை கண்டார்க்கு பிண்டத்தில்
மாணா பலிக்கும் மருந்து. (75)
வரி
1. இல். பி. ,பி. 2 இல்ல அ. ,. ய(அ). 3 இல். கா,. க. 4 இல் மா,. மா
வெண்பா
அப்புவுடன் வன்னியும் ஆனதோர் தேயுவும்
இப்புவியி லேக மிருந்திட -- ஒப்பியதோர்
ஆதி வழலை ஆகுமே ஈதறியும்
சேதியின் நூலினால் செய். பாடல். (89)
வரி 1 இல் அ. ஆ. 2 இல் இ,. மி. 3. இல். ஆ. ,. ஆ. 4. இல் சே ,. செ
அகத்தியர் எழுதிய மதி வெண்பா. 100 என்ற நூலிலும் பாருங்கள்
தவறாத மோனையை அகத்தியர் கையாண்டது கண்ணால் பார்த்து நம்புங்கள்
மோனையை அகத்தியர் காலத்திலேயே கையாண்ட ஒன்று . மோனை
வே ண்டாமென்பது கையாலாகாத த் தனம். வேறில்லை என்பேன்
இதுவொரு கிடைத்தற்கரிய நூலாகும்
கடவுள் வாழ்த்தில் பாருங்கள்
வெண்பா
ஆதி சிவனுமையாட் கன்புடனே யன்றுறைத்த
சோதிமதி வெண்பாவைச் சொல்லுதற்கு. -- நீதியுள்ள
மாலைசிறு பெண்ணாம் மனோன்மணியி டம்வைத்த
காளையே றுஞ்சிவன்றாள். காப்பு
1 வது வரியில். ஏ. க. 2 வது சோ சொ. 3. வது மா,. ம. 4 வது. கா,. கா.
காப்பான ஐந்துகரன் கந்த முருகவேள்
வாய்ப்பா மலர்த்தான் மனதில்லை -- தேற்றித்
தவமுனி சித்தர்முதற் சாற்றிய நூலெல்லாம்
நவமணியா மிந்நூலை நத்து
1 வது வரையில். கா. க
2 வது வரியில். வ. ம
3 வது வரியில். த. ச
4 வது வரையில் ந. நா
பல ஆயிரம் வருடத்திற்கு முன்னமே தமிழ் படைத்த அகத்தியனும் பிறரு வந்தவர்களும்
எதுகை மோனைஉபயோகித்து எழுதிய ஆயிரக்கணக்கில் எழுதிய பல்வகைப் பாடலுண்டு.
வெண்பா கலிவிருத்தம் கலித்துறை வெண்பா கழி நெடிலடி விருத்தங்களை எங்குவேண்டுமாலும்
கொடுக்கிறேன்.. மோனை ஒன்றிரண்டு விடுபட்ட பாடல்களும் உண்டு .மோனை தேவையில்லை
என்று எங்கும் எவரும் சொன்னதில்லை . ஆனால் பாவினம் என்ற இல்லாத ஒன்றை சொல்லுவது
தவறு . அகத்தியனின் மோனைத் தவறா பாடலே சாட்சி
நன்றி