தீபாவளி 2

சென்ற காலங்களின் துன்பங்கள் போயின
போயின என்று இல்லங்களில் எல்லாம்
குத்துக்கொள்ளப் பெருக்கில் இவ்வாண்டு
தீபாவளியைப் பெரும் தீபவொளி பெருக்காய்க்
கொண்டாட வேண்டும் ஆடிப் பெருக்குபோல்

இத்திருநாளில் இரவில் இல்லமெல்லாம் தீபங்கள்
ஏற்றி தீபவொளி பெருக்கி செல்வமெல்லாம்
கொழிக்க அலைமகள் இலக்குமியை மனமார
வணங்கி இல்லத்தில் பெண்மணிகள் செய்த
நெய் அதிரசம் பூந்தி லட்டு இன்னும் பால்பாயாசம்
கார வகைகள் நிவேதனமாய்ப் படைத்து
சாஷ்டாங்கமாய் தரையில் அங்கமெல்லாம் படிய
மனதார தொழுவோமே
வணங்கும்போது உள்ளத்தில் தேங்கி நிற்கும்
நரகாசுரனாம் தீய எண்ணங்கள் அறவே நீங்க
ஞான ஒளி வந்து நிற்க வேண்டிடுவோம் தேவதேவனை
பின்னே படைத்த பிரசாதத்தை பண்போடு
எல்லார்க்கும் தந்து மகிழ்ந்திடுவோமே கூட
பட்டாசும் வெடித்து கேளிக்கையில் இல்லங்களில்
சிறியோரும் பெரியோரும் மகிழவே
புத்தாடை அணிந்து ஆடிப் பாடிடுவோமே

மனிதனின் அசுரகுணங்கள் அறவே அழிந்து
சத்துவ குணமே பெருகிட வேண்டும்
காம க்ரோத லோப மோகங்கள் அழிந்து
நல்லகுணங்கள் கூடட்டும் எல்லோரும்
நலமாய் வாழட்டும் பூமியில் அமைதி நிலவ
அஞான இருள் போக்க தீபங்கள் ஏற்றட்டும்
எங்கும் சாந்தி நிலவட்டும்
தீபாவளி, தீபாவளி ஆம் இது
தீபவொளி தீபவொளி

எழுதியவர் : வவன்-தமிழ்பித்தன்-வாசுதே (24-Oct-22, 7:43 am)
பார்வை : 66

மேலே