🌺 சொல்லப்படாத தீபாவளி வாழ்த்துகள் 🌺

🌹 தீபாவளி வாழ்த்துகள்🌹
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

வாட்ஸ்அப் செய்ய
நேரமும் இல்லை;

வாய்ஸ் காலுக்கும்
வாய்ப்பே இல்லை ;

வாழ்த்து அட்டைகள்
வாங்கிட வில்லை :

வாழ்த்துச் சொல்லும்
வழக்கமு மில்லை !

செவிப்பறைக் கிழிந்திட
வெடிக்காது ;

செவ்வொளி கண்களைப்
பறிக்காது ;

நமுத்துக் கிடக்கும்
வெடியாக ,

நகர்ந்தே கடந்தது
தீபாவளி !!

வாழ்த்த மறந்தோர்க்கும்
வசமான வாழ்த்துகள்!!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (25-Oct-22, 6:23 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 53

மேலே