தீபாவளி

#தீபாவளி
வண்ண வண்ண!
புத்தாடை அணிய
புது புது!
வெடியை வெடித்திட!!!

பலரக பலகாரத்தை!
நாக்கு சுவைத்திட!
பந்தம் புடைசூழ!
சொந்தம் சேர்ந்திருக்க!!!

மக்கள் மனம்!
மகிழ்ச்சி பொங்கிட!
இன்ப வெள்ளம் ஊற்றெடுக்கவே!
ஏங்குகிறது!!!

ஒவ்வொரு எண்ணமும்!
ஒவ்வொரு வண்ணமாய்!
போகிறது!
ஏனெனில்!

உடுத்தவே உடையில்லை!
உண்ண உணவில்லை!!!

பந்தம் இருந்தும்!
பாசமில்லை!
பக்கமில்லை!
இருப்பும் இல்லை!
இருப்பிடமும் இல்லை!!!

ஆனால்,
நிறைய உண்டு!
வறுமையும்!
வலியும்!
இல்லை என்பதும்!
ஏராளம் உண்டு!!!

ஆசை நிராசையாய்!
விருப்பு வெறுப்பாய்!
துன்பத்தை இன்பமாகவும்!
பாக்குவமாய் மாற்றி கொள்ளும்!
ஏழையின்!
வலி நிறைந்த சிரிப்பு!!!

..... இவள் இரமி..... ✍️

எழுதியவர் : இரமி (24-Oct-22, 7:10 pm)
சேர்த்தது : இரமி
பார்வை : 48

மேலே