நாம் யார்
நாம் அனைவரும் பாசத்தால் பிணைக்கப்பட்டமரக்கிளைகள்
பந்தத்தால் சிறைக்கைதி போல கட்டுண்ட அற்ப மானிடர்கள்
அன்பு எனும் உடைந்த கண்ணாடியில் நம்மை காண்பவர்கள்
நட்பெனும் செயற்கை பாலில் நெய்யை போல இருப்பவர்கள்
நேசமெனும் வலுவில்லாத கைத்தடியை பற்றிச்செல்பவர்கள்
ஆசையெனும் பெருங்கடலில் பேராசை படகில் செல்பவர்கள்
மோகப் புதைமணலில் புதைந்து, மீண்டு(ம்) புதைகின்றவர்கள்
காமப்பசிக்கு அடிமையாகி தன்மானம் மறந்து சுழல்கிறவர்கள்
பொருளுக்காக மனசாட்சியை ஒடுக்கி வைக்க துணிந்தவர்கள்
புகழுக்காக இழுக்கையும் சம்பாதிக்கும் மனம் கொண்டவர்கள்
அன்பை போதித்து பிற உயிர்களின் ரத்தத்தை உறிஞ்சுபவர்கள்
இரக்கம் என்று பறைசாற்றிவிட்டு ஏழையை களவாடுபவர்கள்
கருணையை தெய்வத்துடன் ஒப்பிட்டு, கருணை மறப்பவர்கள்
லஞ்சம் என்ற வார்த்தையை அன்றாடம் செயல்படுத்துபவர்கள்
ஊழல் செய்வது குற்றம் என்று தர்மம் பேசி ஊழல் செய்பவர்கள்
மெய்ஞானத்தை விஞ்ஞானம் எனும் கடலில் தீவாக்கியவர்கள்
இச்செயல்களில் ஒவ்வொரும் ஏதோ விதத்தில் ஈடுபட்டுள்ளனர்
எவ்வளவு அதிகம் ஈடுபடுகிறார்களோ அந்த அளவு ஈட்டுகிறார்கள்
ஆடைகள் இல்லாதபோதும் இலைகள் போர்த்தி மானம் காத்தோம்
உடைகள் பல கோடிகள் நெய்தும், இன்று மானத்தை தேடுகிறோம்
உலகம் முன்னேறிய வண்ணம்தான் இருக்கிறது, என்ன வளர்ச்சி?