சுகமோ சுகம்
"குசு" இந்த இரண்டுயெழுத்தை
பொது இடங்களில்
பேசுவதும் எழுதுவதும்
அசிங்கமென்று
பலரும் தயக்கம் கொள்வதுண்டு...!!
"குசு" யென்னும்
இந்த வாயு மனிதனின்
உடலில் இருந்து
வெளியேறா விட்டால்
உடலும் உள்ளமும் படுகின்ற
வேதனை என்னவென்பதை அவஸ்தைப்படுவோரிடம்
கேட்டுப்பாருங்க புரியும்...!!
"குசு" வெளியேறி விட்டால்
உடலும் உள்ளமும் துள்ளும்
ஆனந்தத்தை வார்த்தைகளில்
புரிய வைக்க இயலாது...!!
குசு குசுவென்று
ஒவ்வொரு வரும்
பேசினாலும்
ஒன்னும் புரியாது...!!
என்ன சுகம்
என்ன சுகமென்று
பாடினால் தான்
அந்த சுகம் புரியும்...!!
--கோவை சுபா