பூவையரும் பூவினமும்
பூவையின் கையிலே
பூ
இதில் மென்மையானது
எது
பூவா..? பூவையா...?
பட்டி மன்றம் நடத்த
ஓர் அருமையான தலைப்(பூ)பு
பூவே
நீ மலர்ந்தும் மலராமல் அரும்பாக இருக்கும் போதே
பூவையர்கள் உன்னை
விரும்பி சூடிக் கொள்வார்கள்
பூவே
நீ மலர்ந்து மணம் வீசும் போது
பூஜைக்கு வந்த மலரென்று
அர்ச்சனை செய்து மகிழ்வோர்
பூஜை முடிந்ததும்
குப்பையென்று தூக்கி வீசிவிடுகிறார்கள்
பல இடங்களில்
பூவையரின் நிலையும்
பூவைப்போல்தான்...!!
பூவினங்களில்
மல்லிகை முல்லையென்றும்
மாம்பூ மகிழம்பூ தாழம்பூ என்று
பல வகைகள்யுண்டு
பூவையரிலும்
அத்தினி, சிங்கினி, சித்தினி
பத்மினி என்று பிரிவுகளுண்டு...!!
பூவையரும் பூவினமும்
ஓரினமென்று சொன்னால்
மறுப்பவர்கள் யாரேனும்
உண்டோ இப்பூவுலகில்...!!
--கோவை சுபா