ஊசிக்கு ஒரு கவிதை

🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡

*ஊசிக்கு ஒரு கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡

#ஊசி

மற்றவர்களுக்காகவே
உழைத்து உழைத்து
இளைத்துப் போன
ஏழையின் உடல் .....

வல்லவனுக்கு
புல்லும் ஆயுதம்
என்பது போல்.....
ஓட்டை கூட
சில இடங்களில்
பலம் தான் என்று
நிரூபித்துக் காட்டிய
புத்திசாலி... !!

கவனக்குறைவாக
கையாண்டுவிட்டு
ஊசி குத்தி விட்டது என்று
சொல்லும் மனிதர்கள்
என்றுதான் சொல்வார்களோ
ஊசியில்
குத்திக் கொண்டேன் எனறு...

முனை மழுங்க
துணிகளைத் தைத்தாலும்
பெருமை என்னவோ
கத்திரிக்கோலுக்கு தான்
துணிக்கடையில்....

பூவோடு சேர்ந்து
நார்ரும் மணப்பது போல்
ஊசியோடு சேர்ந்து
நூலும்
மகத்துவம் பெறுகிறது....!

ஏழைகளின்
கிழிந்த ஆடையை
தைக்க முன் வந்த
ஊசி போல்
ஏழைகளின்
கிழிந்த வாழ்க்கையை
தைக்க யார் தான்
முன் வருவார்களோ?

நிர்வாணங்களுக்கு
ஆடை தைத்து தந்தாலும்
இதை
அலட்சியமாக
நினைப்பவர்களும்
அடிக்கடி
தொலைப்பவர்களுமே
அதிகம்......!!!

ஊசியிடமிருந்து
இணைத்து வைக்கும்
பண்பை
மனிதன் என்று
கற்றுக் கொள்ளப்
போகிறானோ....?

*கவிதை ரசிகன் குமரேசன*

🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡🪡

எழுதியவர் : கவிதை ரசிகன் (30-Oct-22, 7:58 pm)
பார்வை : 25

மேலே