நெருப்பு

நம்பிக்கை துரோகத்தில்
வஞ்சிக்கப் பட்டவன்
நெஞ்சில் என்றும் நெருப்பு

உழைத்து ஓடாய் போய்
மலைத்து நிற்கும் ஏழையின்
வயிற்றில் அணையா நெருப்பு

பட்டம்பெற்றும் வேலையின்றி
நொடித்து போன மாணவன்
மனதில் நீருபூத்த நெருப்பு

பிள்ளைகள் பல பெற்று
தொல்லைகள் அனுபவிக்கும்
பெற்றோர் மனதில் நெருப்பு

கல்யாண வயதைக் கடந்து
காத்து நிற்கும் கன்னியரின்
எண்ணத்தில் சுடும் நெருப்பு

எரிகிற வீட்டில் பிடுங்கி பிழைக்கும்
சுயநலவாதிளை சுட்டெறிக்க
வரவேண்டும் பெரும் நெருப்பு

சாதி சமய மதபேதங்கள் புகுத்தி
வீதியில் வந்து சண்டையிடும்
அறிவற்றவரை அழிக்க வா நெருப்பு

எழுதியவர் : ரவிராஜன் (31-Oct-22, 8:56 am)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : neruppu
பார்வை : 187

மேலே