போதை மாறும் பாதை
போதையினால் நிச்சயம்
தடுமாறும் பாதை//
மாறுவானென நம்பி
நிற்பாள் பேதை//
காலை முதல் மாடாய்
உழைப்பான் ஏழை//
மாலையில் மயங்கிக்
கிடப்பான் கோழை//
பிள்ளைகளோடு பசியில்
கிடப்பாள் வீட்டில்//
சல்லிக்காசு இன்றி கணவன் கையில் பாட்டில்//
கனவுகள் கருகித்தான்
கண்முன் போயாச்சு//
வாழ்க்கையே பெரும்
ஏமாற்றம் என்றாச்சு//
குடிமக்கள் பட்ஜெட் என்று
தவறாமல் வந்தாச்சு//
அடித்தட்டு மக்கள் கவலை
நிலையாக நின்றாச்சு//
உறுதியோடு உழைத்திடு
என்றென்றும் பெண்ணே//
வெற்றி நிச்சயம் வந்திடும்
உன் கண்முன்னே//
கல்வியால் மாற்றப்பார்
உன்னோட தொல்லை//
நிஜக்கடவுளாக காத்திடுவான்
நீ பெற்ற பிள்ளை//