பேச்சு
பேசுவது ஓர் கலையே
சிறந்த பேச்சால் உலகில்
உயர்ந்தவர்கள் பலருண்டு
தேவையற்ற பேச்சால்
வீழ்ந்தவர்களும் பலருண்டு...!!
வார்த்தைகளின்
அர்த்தம் புரிந்து
கண்ணியமாக பேசுவது
அறிவின் வளர்ச்சி...!!
வார்த்தைகளின்
அர்த்தம் புரியாமல்
பேசுவது மூடத்தனம்
தேவையில்லாமல் பேசுவது
அதிகப் பிரசங்கி தனம்
தேவையிருக்கும் இடங்களில்
பேசாமல் இருப்பது
முட்டாள் தனம்
மனிதா தேவையில்லா
பேச்சுக்களை
பேசாமல் இருந்தால்
பிரச்சனைகள் இல்லாமல்
அமைதியாக வாழலாம்...!!
--கோவை சுபா