பெண் உதவி இயக்குனர்

என் இனிய தனிமையே ❤️

விடுதி அறையில்
விடியலை தேடுகிறேன்
பசியோடு தொடரும் இரவுகளில்
எத்தனை எத்தனை நினைவுகள்
சூரியன் உதிக்கும் வரை
திக்கற்ற சிந்தனைகளில் மனம்
உறக்கம் இல்லா இரவுகளில்
உறவுகளை நினைத்து பார்க்கிறேன்
தனிமையாய் உணரும் தருவாயில்
ஆறுதல் சொல்ல ஏதுவாய்
பேப்பரும் பேனாவும்....
தொடர்கிறது நாள் தோறும் வலிகள்
நீளுகிறது என் ஏக்கங்களின் வரிகள்
சம மரியாதை உண்டு என நினைத்து
சினிமாவின் மீது காதல்
வார்த்தைகளால் சொல்லமுடியாது
வரிகளால் எழுத முடியாது
உணர்ந்தால் மட்டுமே வலிகள் புரியும்
உதவி இயக்குனர்கள் என்றாலே
பெரும் திண்டாட்டங்கள்தான்.....
அதுவும் பெண் என்றால் ...?
கேள்விக்குறிகள் நிறைந்த பயணம்
உறக்கத்தை மறந்து நீளுகிறது இரவு
எத்தனை கேளிக்கைகள்
அத்தனைக்கும் நடுவில்
விருந்தாக்க நினைக்கும் மிருகங்கள்
உதவி எனக்கேட்டால்
உடம்பை நோக்கும் கூட்டம்
கூட்டத்திற்கு நடுவில் என் போராட்டம்
மனதில் ஆயிரம் வலிகள்
சிரிக்கிறேன் போலி புன்னகையால்
செல்லும் பாதையோ கரடு முரடு
அதனை தாண்டுவதே என் இலக்கு
திண்டாட்டத்துடன் முயற்சிக்கிறேன்
நாளை கொண்டாடுவதற்காக...

- கௌசல்யா சேகர் -

எழுதியவர் : Kowsalya sekar (31-Oct-22, 8:30 pm)
சேர்த்தது : கௌசல்யா சேகர்
பார்வை : 134

மேலே