வாசிப்பவள் விரலிலிருந்து விழிகள் வரை
சாளரத்தின் ஓரத்தில்
வெய்யிலில் நிழலுக்காக நின்றேன்
காற்றில் மிதந்து வந்து
காதில் பாய்ந்தது வீணையின் நாதம்
ஏதோ ஒரு ராகத்தில் ......
சாளரத்தின் உள்ளே திரும்பிப் பார்த்தேன்
வாசிப்பவள் விரலிலிருந்து விழிகள் வரை
தூரிகை வேண்டும்
ஓவியம் எழுதிட ....