விழிகள் கவிந்தன அந்திஅழகினில்

பூக்கள் நனைந்தன பனிப்பொழிவில்
புன்னகை மலர்ந்தது மௌனமொழியில்
விழிகள் கவிந்தன அந்திஅழகினில்
என்கவிதை நடந்தது மார்கழியில் !
பூக்கள் நனையும் பனிமென் பொழிவினில்
புன்னகை பூத்திடும் மௌன மொழியினில்
கண்கள் கவிந்திடும் அந்தியழ கில்நடக்கும்
என்கவிதை மார்கழி யில் !
----இயல்பு யாப்பு அழகிலும்