உயிருக்கு உறவாய்

விரைவில் வெட்டப்போகும்
மரம்
நம்பிக்கையோடு கூடுகட்டியது பறவை
பார்த்து பதபதைத்தது
என் மனம்
மரத்தில் கட்டினேன்
மஞ்சள் சேலை
மற்றதெல்லாம் இறைவன்
வேலை
மரத்தைச் சுற்றி பக்தர்கள்
வலம்
வாஞ்சையோடு எனைப்பார்த்தது
மரம்
வாழ்த்தியதுபோல் கிரீச்சிட்டது
பறவை
பரைசாற்றுவது போலிருந்தது
எங்கள் உறவை

எழுதியவர் : ரவிராஜன் (9-Nov-22, 7:22 pm)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : uyirukku uravaay
பார்வை : 247

மேலே