காற்றாய் வருவாயா
காற்றாய் வருவாயா ..
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
காற்றாய் வருவாயா கானமும் தருவாயா/
தருவாயா தினந்தோறும் தவறாது பேரன்பை /
பேரன்பைப் பெற்றோரே பேருலகின் காவலர்கள் /
காவலர்கள் இல்லாது பூவுலகம் வாழாதே/
வாழாதே நானின்றி நன்மகளே தனியாக/
தனியாக வாழ்வதற்காய்த் தாரணியில் பிறக்கவில்லை/
பிறக்கவில்லை அவதரித்தாய் பெண்மகளும் என்னுள்ளே /
என்னுள்ளே நுழைந்தாயே உள்மூச்சுக் காற்றாய் !!
-யாதுமறியான்.