வருவாயா
காரிகையே
சிற்ப சிலையே!
வண்ணமயமாக்கும்
தூரிகையே!
உன்னை கண்டு
சிற்றின்பம் கொண்டு
சிறகடித்து
உலாவி
ஆரவாரம் பெருகி
இன்ப ஊற்றில்
இளைப்பாறி!
மூன்றெழுத்து
மந்திரத்தில் மயங்கி
முழுவதும்
உன் நினைவில்
சிணுங்கி சிணுங்கி
சிரித்து
காற்றிலே
கவி பாடி
காதலை
உன் காதில் சொல்ல!
ஏக்கமும்
ஏங்கி தவிர்க்க
மெய்யும் மெலிந்து
கிடக்க
பசலையே பாதையாக
பயணிக்க!
அங்கயற்கண்ணியே
இந்த ஆடவனை
பாரடி!
உன் பார்வையில்
பயணிக்கும்
கவி பித்தனை
ஏறெடுத்து பாரடி
பார்கவியே!
என் கரம் நீட்டி
யாசகம் கேட்கிறேன்
என் வாழ்வை வசந்தமாக்கிட
வருவாயா
வளவி அணிந்த வள்ளியே!
..... இவள் இரமி..... ✍️