என் தேடலில் நீ மட்டுமே இருக்கிறாய் 555

***என் தேடலில் நீ மட்டுமே இருக்கிறாய் 555 ***
என்னுயிரே...
எதிர்பாராத உன் பார்வை அன்று என் மேல்வீசியது ஏன்...
நீ புன்னகைத்த மறக்க
முடியாத அந்த புன்னகை...
நாம் சேர்ந்திருந்த
நாட்கள் எல்லாம்...
கண்விழிப்பில் கலைந்த கனவுபோல
இன்று கலைந்து சென்றது...
ஒவ்வொரு சந்தோஷத்திலும்
அன்று உன்னை தேடியது...
இன்றைய
நிம்மதியில்லா நேரத்திலும்...
உன்னையே
என் மனம் தேடுது...
ஊரெல்லாம் உறங்குகிறது
என் உள்ளமோ கலவரம் செய்கிறது...
உன்னை நினைக்க கூடாதென்று
உறுதியாக இருந்தாலும்...
உன்னுடன் இருந்த
சில நினைவுகள்...
தினம் உன்னை
நினைவூட்டுகிறது...
இதயத்தில் பதிந்த உன் முகம்
அழியாத ஓவியமாக என்னில்...
உன் தேடலில் நான்
இல்லாமல் இருக்கலாம்...
என் தேடலில் நீ
மட்டுமே இருக்கிறாய்...
உயிரோடுதான் இருக்கிறேன்
நினைவில்லாமல் சுவாசித்துக்கொண்டு.....
***முதல்பூ.பெ.மணி.....***