எல்லை இல்லா எழிலாய்
ஓம்கார கடலலையின் ஓசையாய்
ஒளியாய் கதிரவன் ஒளியாய் இன்னும்
காணும் இயற்கையின் எழிலாய் மற்றும்
கோயில் சிலையாய் அதில் துதிப்போர்
துதியால் என்றும் துலங்கும் சக்தியாய்
எல்லை இல்லா எழிலாம் இறைவன்
அறிவோம் துதிப்போம் போற்றுவோம்