மன்னிப்பு

இதயத்தில் பூத்த இரக்கமே மன்னிப்பு
இருக்கமான மனதையும் இலக வைக்கும் இந்த மன்னிப்பு
மனிதனிடம் மட்டுமே பிறப்பது மன்னிப்பு
மனிதாபி மானத்தின் அடிப்படையே மன்னிப்பு;
மன்னிப்பது மாண்பு;
மன்னிப்பு என்பது தன்மை;
மன்னிப்பதே பெரும் தன்மை;
மன்னிப்பு கேட்பது மகத்தான பண்பு;
மனசார விட்டுத் தருவது மன்னிப்பு;
விட்டு எறிவது மன்னிப்பு இல்லை;
விட்டு தறுவதே மன்னிப்பு;
மனதின் பாரத்தை இறக்கும் மனிதாபி மானமே மன்னிப்பு;
மற்றவர்கள் குற்றம் செய்தாலும்
மறந்தே நேசிப்பது மன்னிப்பு;
மறுபடியும் உன்னிடத்தில்
வரவைக்கும் வசீகரமே மன்னிப்பு;
மனித இனத்தின் மானமே மன்னிப்பு;
மருந்தாய் வருவது மன்னிப்பு;
தவறையும் திருத்துவது மன்னிப்பு;
தான் என்ற அகந்தையை விரட்டுவது மன்னிப்பு;
குற்றம் செய்தவனையும்
சுற்றமாக்கும் இந்த மன்னிப்பு;
சினம் கொண்டவனையும்
சிந்திக்க வைப்பது மன்னிப்பு;
மன்னிப்பு கேட்பது கேலி இல்லை
மன்னிப்பு கேட்டபோதும் வேள்விதான் .

பணம் பாசத்தையும்
தாண்டியது மன்னிப்பு;
வாய் வார்த்தையால் கேட்பது மட்டும் மன்னிப்பில்லை;
மானசீகமாக மனசார கேட்க வேண்டியது மன்னிப்பு;
மன்னிப்பதே ஒரு தண்டனைதான்;
தவறு செய்தவனை சிந்திக்க வைக்கும் மாபெறும் தண்டனைதான்;
சுற்றம் பார்க்காது;
சுகத்தைத் தருவது மன்னிப்பு;
மோதலைத் தடுக்கும் மன்னிப்பு;
மனித இனத்திடம் மட்டுமே பிறப்பது
இந்த மன்னிப்பு;
நிம்மதியற்று நிலை குழைந்தவனுக்கு
கிடைத்த மருந்தே மன்னிப்பு;
ஆனந்தக் கண்ணீர்
வெளியேற்றும் அன்புத் தூரலே மன்னிப்பு;
மறுப்பு தெருவிக்காதது மன்னிப்பு;
மறுபடியும் நட்பை பிறக்கவைப்பது மன்னிப்பு;
நேசித்தவன் வஞ்சனைசெய்தாலும்
நேசிக்க வைப்பது மன்னிப்பு
இன்னொறு தவறு ;
நடக்காமல் தடுப்பதும் மன்னிப்பு;
தனித்துவிட்டு தண்டிக்க வைப்பது மன்னிப்பு;
மன்னிக்கவும் மன்னிப்பு கேட்கவும் கற்றுகொள்ள வேண்டும்;
மனிதநேயத்தில் பூத்த பூ மன்னிப்பு;
மன்னிப்பு கேட்பவன் மனிதனாகின்றான்;
மன்னிப்பவன் மாமனிதனாகின்றான்;
மறந்தவன் இறையாகின்றான்;
அடிக்கடி மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
அடியோடு மறக்க கற்றுக் கொள்ளாதீர்கள்;
பாவத்தில் பாவம் பெரும் பாவம் மன்னிக்காமல் இருப்பது;
மன்னிப்பு கேட்க தயங்க வேண்டாம்;
மன்னிப்பும் கண்ணியம் தான்;
மன்னிப்பதே பெரும் பாக்கியமும் புண்ணியமும் தான்;
மன்னித்தால் மனிதம்
மறந்தால் புனிதம்
பொறுத்தல் பண்பு பணிவுடைமையாம்;
தவறை மறத்தல் அப்பொறையினும் அன்புடைமையாம்;
மறுத்தலைவிட மறத்தலே தன்னலம் இல்லா தியாகமாம்;
மறத்தலை விட மன்னித்தலே தெய்வீகமாம்;

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (11-Nov-22, 4:35 pm)
Tanglish : mannippu
பார்வை : 3319

மேலே