பேரின்பம்

இன்பம் கண்டேன்
இன்பம் பேரின்பம்
பக்தி பெருவெள்ளம்
என்னுள் எங்கும்
ஓடியே நிரம்பிட
அன்று மண்ணும்
விண்ணும் அளந்தோன்
திருப்பாதங்கள் கண்டு
ஆங்கு மாநகர் காஞ்சி
ஊரகத்து மணிமாட கோயிலிலே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-vasudevan (13-Nov-22, 10:20 am)
Tanglish : perinbam
பார்வை : 144

மேலே