கண்ணீர் அஞ்சலி
பாரமாகிவிட்டோம் என்றோ
தூரமாகப் போனாய் அப்பா!
பலகாலம் வாழ்ந்திருந்த
படுக்கையறை விடுத்திப்போது
வண்ணப்புகைப்படமாய்
வாழ்ந்துகொண்டிருக்கிறாய் - நம்
வரவேற்பறையில்!
விதியின் சதி;
நினைக்கும் மாத்திரத்தில்
ஊற்றெடுக்கிறது
விழிகளில் நதி!
ஆசையாக, ஆஸ்தியாக
ஆளாக்கியதெல்லாம்
அந்திமக் கடன்செய்து
அஸ்தியாக்கத்தானோ அப்பா?
பிரச்சினைகளில் பெரும்பாலும்
சிக்கியதில்லை;
சிக்கிய பிரச்சினைகளிலிருந்து
சிங்கமாய் என்னைக் காக்க – நீ
தவறியதில்லை.
அப்பா,
அடைந்தேயிருந்த உன் படுக்கையறை
இப்பொழுதெல்லாம்
வாய்த் திறந்தே கிடக்கிறது;
நீ ஏற்படுத்திய வெற்றிடத்தை
நிசப்தம் நிரப்பியிருக்கிறது.
’மீன் சாப்பிடும்போது பேசாதே’
அந்த அதட்டலுடன்
அக்கறைச் சிறகு விரிக்க
இனி யாரப்பா எங்களுக்கு?
”உண்பதும் உறங்குவதுமாய் முடியும்”
தாயுமானவர் தத்துவத்தை
உன் சிரமேற்கொண்டாலும்…
அந்திமக் காலத்தில்
ஆகாத தயிர் சோறுக்கு
அடம்பிடித்தாய்;
ஆஸ்துமா அதிகமாகுமென
இசையாமல் நானும்
மசியாமல் நீயும்…
நீடித்த பிடிவாதத்தில்
உண்ணாமலே
ஓய்ந்த உன் மூச்சு
காற்றாகி வருடினாலும்
மனம் புழுங்குகிறதே,
மன்னிப்பாயா அப்பா!
0 கருத்துகள்
Gopinath Jambulingam
6 நவம்பர் அன்று 10:24 AM மணிக்கு · பொது உடன் பகிர்ந்தது
இன்றைய உறவு வட்டங்களைச் சார்ந்த இளம் தலைமுறையினரை உற்று கவனிக்கும் போது ஒரு விஷயத்தை அறிந்துகொள்ள முடிகிறது. அதாவது, அம்மா-மகள் மற்றும் அப்பா-ம