பதுமை உனக்கும் எழுத நினைத்தேன்

வடிவம் : 1
எதுகைக் கிலக்கியம் சொல்ல நினைத்தேன்
பொதிகைத் தமிழுதவ முன்வந்து நிற்க
பதுமை உனக்கும் எழுத நினைத்தேன்
எதுகை பொதிகைத் தமிழிரண்டும் சேர்ந்து
எனதுமுன் நிற்குது பார்
வடிவம் : 2
எதுகைக் கிலக்கியம் சொல்ல நினைத்தேன்
பொதிகைத் தமிழுதவ முன்வந்து நிற்க
பதுமை உனக்கும் எழுத நினைத்தேன்
எதுகை பொதிகைத் தமிழிரண்டும் சேர்ந்து
பதிந்திட சொல்லுது பார்