பொண்ணு விலையும் நம்ம பூமி 555

***பொண்ணு விலையும் நம்ம பூமி 555 ***

பூமி...


காதலை நினைத்து கண்ணீர்
சிந்தும் காதலர்களை போல...

தொலைவில் இருக்கும்
காதல் பூமிக்காக...

வான்மேகம் கண்ணீர் சிந்துகிறது
வறண்ட பூமியெங்கும்...

மேக கண்ணீரால் பசுமையை
செழிக்க வை
க்கிறது பூமி...

தாகம் தீர்க்கும் நீரை
மனிதன் சேகரிப்பதில்லை...

பூமியோ தனக்குள் சேகரித்து மனிதனின்
தின தேவைகளை பூர்த்தி செய்கிறது...

மனிதன் வேண்டாமென தூக்கி எறிந்த
விதைக
ளுக்கு உயிர் கொடுத்து...

பூமியெங்கும் பூ செடிகள்,
மலர் கொடிகள், பூ மரங்கள்...

செழிக்க வைத்து
மனிதரை ரசிக்க வைக்கிறது...

உன் பிள்ளையை மாற்றான்
அடித்துவிட்டால் பொங்கி எ
ழும் மானிடா...

பூமியின் பிள்ளைகளான மரங்களை
நீ அழித்தால் பொறுத்து கொள்ளுமா...

பூகம்பத்தால்
உன்னையே அழித்துவிடும்...

பூமியை
மாசுபடுத்தும் மானிடமே...

நாம்
சுவாசிக்கும் காற்றை பூமியின்
பிள்ளைகளே கொடுக்கிறார்கள்...

உன் வயிற்று பசியை போக்க கைகளில்
தானியங்களை ஏந்தி நிற்கிறது...

நீ கால்வலிக்க
நடக்காமல் சொகு
சாக செல்ல...

எரி பொருள்களை
சேமித்து வைத்திருக்கிறது...

என்னைவிட நீ உன்னைவிட நான்
யார் வசதி படைத்தவன்...

தன்னைத்தானே
மனிதர்கள் காட்டிக்கொள்ள...

விலை உயர்ந்த தங்கம் ,வைரங்களை
குவிழ்த்து வைத்திருக்கிறது...

வேற்று கிரகம் சென்று விவசாயம்
செய்ய நினைக்கும் மானிடமே...

உன் காலடியில்
இருக்கும் பொக்கிஷ பூமியை...

கொ
ஞ்சம்
தலைகவிழ்ந்து பார்...

பூமியின் அருமையை
அப்போது உணர்வாய்...

முதலில் பூமி காப்போ
ம்
பிறகே தேசம் காப்போம்...

இது நம்ம பூமி.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (14-Nov-22, 9:44 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 802

மேலே