காலத்தின் கணக்கு

காலத்தின் கணக்கு

தினம் தினம்
பார்க்கும் முகங்கள்
வெளி உலகங்களில்

அறிமுகம் ஆனவர்களோ
இல்லையோ

பழகி போகும்
முகங்கள்

கை அசைத்தல்
புன்னகை
தலையாட்டல்

கடந்து போகிறோம்
கால ஓட்டத்தில்
மறந்தும் போகிறோம்

நாம் அவர்களை
அவர்கள் நம்மை !

காலம் போடும்
கழித்தல்
கணக்குகளில்
நம்மை சேர்க்கும்
வரை

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (12-Nov-22, 10:04 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kaalaththin kanakku
பார்வை : 180

மேலே