மழைக்கால பொழுது

அதிகாலை தொடங்கி
அந்திமாலை வரை
பொழியும் மழையே
உனக்கு ஓய்வில்லாதது ஏனோ ..

தினமும் பருகும்
தேநீர் பானம்
இன்று மட்டும் புதிதாய்
தித்திப்பது ஏனோ..

பகலவன் தன் பணியை
பாதியிலே விட்டுவிட்டு
ஓய்வெடுக்க வீட்டிற்குள்
ஓடி மறைந்தது ஏனோ..

மழையிதழ்கள் முத்தமிட்டே
மண்ணின் கன்னங்கள்
மருதாணி பூசாமல்
சிவந்தது ஏனோ..

மண்ணில் விழுந்த சில துளிகள்
என் மனதிலும் விழுந்து
உன் மடியில் கரைய துடிப்பதற்கு
காரணம்தான் ஏனோ..

எழுதியவர் : கண்ணன் மனோகரன் (12-Nov-22, 9:01 am)
சேர்த்தது : கண்ணன் மனோகரன்
பார்வை : 279

மேலே