கண்ணன் மனோகரன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கண்ணன் மனோகரன் |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 28-Jan-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 1915 |
புள்ளி | : 59 |
வாழ்கையின் ஒவ்வொரு நொடியையும் இனிமையாய் கழித்து கொண்டிருக்கும் ஓர் இளைஞன். என் கவிதைகளுக்கு மதிப்பளித்து என்னையும் ஓர் கவிஞனாய் மாற்றிய எழுத்து இணையதளத்துக்கும் என் கவிதை வாசகர்களுக்கும் மிக்க நன்றி .என்றும் உங்கள் ஆதரவினை எதிர்பாக்கும் உங்கள் கண்ணன் .
அதிகாலை தொடங்கி
அந்திமாலை வரை
பொழியும் மழையே
உனக்கு ஓய்வில்லாதது ஏனோ ..
தினமும் பருகும்
தேநீர் பானம்
இன்று மட்டும் புதிதாய்
தித்திப்பது ஏனோ..
பகலவன் தன் பணியை
பாதியிலே விட்டுவிட்டு
ஓய்வெடுக்க வீட்டிற்குள்
ஓடி மறைந்தது ஏனோ..
மழையிதழ்கள் முத்தமிட்டே
மண்ணின் கன்னங்கள்
மருதாணி பூசாமல்
சிவந்தது ஏனோ..
மண்ணில் விழுந்த சில துளிகள்
என் மனதிலும் விழுந்து
உன் மடியில் கரைய துடிப்பதற்கு
காரணம்தான் ஏனோ..
கண்ணாடி முன் நின்று
கலைந்த முடியை வாரிய
என் கைகள்
சற்றே நடுங்கியது.
காரிருளில் தோன்றிய
மின்னல் கீற்றாய்
வெண்மயிர் ஒன்று
கண்ணில் தென்பட்டதனால்..
நீ காகிதமென்று
எழுதுகோலாய் வந்தேன்
கல்லாய் மாறி விட்டாய்..
நீ கல்லென்று
உளியாய் வந்தேன்
கடலாய் மாறி விட்டாய்..
நீ கடலென்று
கட்டுமரமாய் வந்தேன்
காற்றாய் மாறி விட்டாய்..
நீ காற்றெண்டு
சிறகாய் வந்தேன்
சிலையாய் மாறி விட்டாய்..
நீ சிலையென்று
மலராய் வந்தேன்
சிகரமாய் மாறி விட்டாய்..
நீ சிகரமென்று
ஊன்றுகோலாய் வந்தேன்
ஊஞ்சலாய் மாறி விட்டாய்..
நீ ஊஞ்சலென்று
கயிறாய் வந்தேன்
கார்மேகமாய் மாறி விட்டாய்..
நீ கார்மேகமென்று
கருமை நிறமாய் வந்தேன்
கனவாய் மாறிவிட்டாய்..
நீ கனவென்று
கற்பனையாய் வந்தேன்
கவிதையாய் மாறிவிட்டாய்..
நீ கவிதையென்று
காதலாய் வந்தேன்
என்ன
நின்னோடு இணையும்
நினைப்பு என்றும்
நிகழாது என்பதனால்
நிழலோடு நிழலாய்
நித்தமும் இணைவேன்..
என் கரத்தினில் உன் கரம் சேர்த்து
நெடுதூரம் நடக்க ஆசை..!
அடை மழையில் ஒரு குடையில்
உன் மூச்சுகாற்றின் வெப்பம் அறிய ஆசை..!
நீ சுவைத்த தேநீரை நான் சுவைத்து
இனிப்பின் உண்மை அர்த்தம் உணர ஆசை..!
என் தொலைபேசி மணியடிக்க அது நீயாகத்தான்
இருக்கவேண்டும் என்ற ஒரு சுயநல ஆசை..!
உன் இதல்வரிகளின் எண்ணிகையை
என் இதல்வரிகொண்டு எண்ணிட ஆசை..!
இருள் சூழ்ந்த இரவுகளுக்கு இடையில்
நாம் இருவர் இணையும் பொழுது காண ஆசை..!
உன் பாதங்களில் முத்தமிட்டு
என் பாவங்களினை பாதியாக்க ஆசை..!
உன் புடவையினில் என் தலை துவட்ட
தினமும் மழையில் நனைந்துவர ஆசை..!
உன் கூந்தலில் என் முகம் புதைத்து
நீ சூடிய பூவின்
என் முத்தங்களை
வரிசையாக வானிற்கு
அனுப்பி உள்ளேன்
நேரில் கொடுப்பதற்கு அஞ்சி..
தவறாமல் பெற்றுக்கொள் பெண்ணே
மழை வரும் தருணங்களில் எல்லாம்..
என் முத்தங்களை
வரிசையாக வானிற்கு
அனுப்பி உள்ளேன்
நேரில் கொடுப்பதற்கு அஞ்சி..
தவறாமல் பெற்றுக்கொள் பெண்ணே
மழை வரும் தருணங்களில் எல்லாம்..