ஆசை

என் கரத்தினில் உன் கரம் சேர்த்து
நெடுதூரம் நடக்க ஆசை..!

அடை மழையில் ஒரு குடையில்
உன் மூச்சுகாற்றின் வெப்பம் அறிய ஆசை..!

நீ சுவைத்த தேநீரை நான் சுவைத்து
இனிப்பின் உண்மை அர்த்தம் உணர ஆசை..!

என் தொலைபேசி மணியடிக்க அது நீயாகத்தான்
இருக்கவேண்டும் என்ற ஒரு சுயநல ஆசை..!

உன் இதல்வரிகளின் எண்ணிகையை
என் இதல்வரிகொண்டு எண்ணிட ஆசை..!

இருள் சூழ்ந்த இரவுகளுக்கு இடையில்
நாம் இருவர் இணையும் பொழுது காண ஆசை..!

உன் பாதங்களில் முத்தமிட்டு
என் பாவங்களினை பாதியாக்க ஆசை..!

உன் புடவையினில் என் தலை துவட்ட
தினமும் மழையில் நனைந்துவர ஆசை..!

உன் கூந்தலில் என் முகம் புதைத்து
நீ சூடிய பூவின் வாசம் கண்டறிய ஆசை..!

உறக்கம் கலைந்து நான் எழுந்து பார்க்க
என் மீது உறங்கும் உந்தன் முகம் காண ஆசை.!

உன்னுடன் வாழ்ந்த என் நாட்களை நினைவில் கொண்டு
உனக்குமுன் என் உயிர் பிரிய ஆசை..!

எழுதியவர் : கண்ணன் மனோகரன் (11-Feb-16, 4:46 pm)
சேர்த்தது : கண்ணன் மனோகரன்
Tanglish : aasai
பார்வை : 122

மேலே