வேர் விடும் நட்பு

நட்பை மீட்டெடுக்க
எத்தனையோ வழிகள்...

சிரமம் வேண்டாம்
ஒரு புன்னகையும்
ஒரு ' ஹாய் ' போதும் ...

எங்கோ ஆழத்தில்
புதைந்து கிடந்தாலும்
காற்றடைத்த பந்து போல்
நெஞ்சு கூட்டை மீறி
வந்து விடும்....

காலச்சூழலில்
கரைந்து போய் விட்ட
மனதை கேட்டால் தெரியும்
அது வெளிவரத்தவிக்கும்
சிசுவின் வேதனையோடு
தாயின் வேதனையையும்
சேர்த்தே அனுபவித்து கொண்டு கிடப்பது...

மலர்ந்தால் மணக்கும் மலரல்ல நட்பு...
இன்னும்
மலராத மொட்டு போல்,
விடியாத இரவு போல்,
சுவைக்காத தேனைப் போல்,
இறுக்க கட்டி வைத்தாலும்
இன்னும் வேர் விட்டு
கிளைத்து கொண்டு தான் இருக்கும்
நெஞ்சில்...

எழுதியவர் : (11-Feb-16, 4:32 pm)
சேர்த்தது : honeywing
Tanglish : ver vidum natpu
பார்வை : 175

மேலே