எழிலிடையில் குறளெழுதி நடக்கும் ஏந்திழையே
விழியில் மலருதோ விடியலின் செந்தாமரை
மொழியில் மலருமா செந்தமிழ்ப் பாடல்
பொழியுமோ தேனினைப் புன்னகைச் செவ்விதழ்
எழிலிடையில் குறளெழுதி நடக்கும் ஏந்திழையே
விழியில் மலரும் விடியல் கமலம்
மொழியில் மலருதோ செந்தமிழ்ப் பாடல்
பொழியுமோ தேனினைப் செம்மை இதழ்கள்
எழிலிடை யில்குற ளோ
விழியில் மலரும் விடியல் கமலம்
மொழியில் மலரும் தமிழ்ப்பா-- விழியே
பொழியுமோ தேனினைப் செம்மை இதழ்கள்
எழிலிடை யில்குற ளோ